பருவமழை கட்டுப்பாட்டு அறையில் மேயர் சரவணன் ஆய்வு
நெல்லையில் பருவமழை கட்டுப்பாட்டு அறையில் மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாநகராட்சி 4 மண்டல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடம் இருந்து எந்த வகையான கோரிக்கைகள் வருகிறது. தினமும் எத்தனை கோரிக்கைகள் வருகிறது. அதில் எத்தனை கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.