மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு...!

மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது.

Update: 2023-08-05 04:52 GMT

மேட்டூர்,

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 60.11 அடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 154 கன அடி நீர்வரத்து வந்தது. அது நேற்று காலை 131 அடியாக குறைந்தது.

மேலும், அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 60.11 அடியாக இருந்தது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் இன்று 58 அடியாக சரிந்துள்ளது. அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்