கிணற்றில் தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு
புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி இறந்தார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள தோட்டகூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது36). கட்டிட மேஸ்திரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே நேற்று காலையில் அருகில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மணிகண்டன் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மணிகண்டன் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.