அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்கு தூதா? -பொய் மூைடகளை எடப்பாடி பழனிசாமி அவிழ்த்துவிடுகிறார் - மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய தூதா? என்பது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பொய் மூடைகளை அவிழ்த்துவிடுகிறார் என தெரிவித்தார்.

Update: 2023-05-04 20:42 GMT


அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய தூதா? என்பது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பொய் மூடைகளை அவிழ்த்துவிடுகிறார் என தெரிவித்தார்.

பேட்டி

சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள், அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்கு உங்கள் தரப்பில் இருந்து தூது அனுப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.

அதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், "எடப்பாடி பழனிசாமி தினமும் பொய் மூடைகளை அவிழ்த்து விடுகிறார். இது அவரது அண்ட புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக உள்ளது" என்றார்.

தொண்டர்கள் எங்கள் பக்கம்

மேலும் அவர் கூறுகையில், "அ.தி.மு.க. தொடர்பாக நான் தொடுத்த வழக்கில், தேர்தல் ஆணையமும், ேகார்ட்டும் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. அவர் விளக்கம் அளித்த பின்பு அது குறித்து விரிவாக பேசுவேன்.. தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது திருச்சி மாநாட்டிற்கு பின்பு நிருபணம் ஆகி உள்ளது" என தெரிவித்தார்.

பின்னர் அவர், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில், ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்