செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

Update: 2023-08-28 19:30 GMT

போலீஸ் மரியாதை

*நவல்பட்டு அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நடு தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் பாலக்கரை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். உடல் நலக்குறைவால் இறந்தார். இதனையடுத்து திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஓய்வூதியர் சங்க விழா

*திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் 21-ம் ஆண்டு சங்க அமைப்பு தின விழா திருச்சியில் சங்க பொதுச்செயலாளர் மருதை தலைமையில் நடைபெற்றது. திருச்சி மண்டல செயலாளர் தாமஸ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாக செயல்படுத்துவதை ரத்து செய்து தமிழக அரசே செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனை கூட்டம்

*திருத்திய மலை ஏரியை தூர்வாரி, அங்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த ஏரியையும், அந்த ஏரிக்கு வரும் வரத்துவாய்க்காலான புங்கன்வாரியையும் கிராம மக்களே தூருவது என முடிவு செய்து கைபா தொண்டு நிறுவன உதவியுடன் தூர்வாரினர். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்ைக குறித்த ஆலோசனை கூட்டம் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தூர்வார நிதி உதவி கொடுத்தவர்களுக்கும், கைபா தொண்டு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்