விருதுநகரில் வணிகர் தினத்தை முன்னிட்டு மெயின் பஜார் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணி மெயின் பஜாரில் இருந்து தொடங்கி நகரசபை அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் சங்க துணை தலைவர் தமீமுன்அன்சாரி, செயலாளர் வெற்றி மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.