வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்
பரங்கிப்பேட்டையில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்
பரங்கிப்பேட்டை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பரங்கிப்பேட்டை நகர வணிகர் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது. இதற்கு நகர வணிகர் சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பரங்கிப்பேட்டை நகர வணிகர் சங்க வளர்ச்சிக்கு பாடுபடுவது, மாதந்தோறும் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்க செயலாளர் சாலி மரக்காயர், பொருளாளர் அஷ்ரப் அலி, துணைத் தலைவர்கள் நிசாமுதீன், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி கார்த்திக் நன்றி கூறினார்.