பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வணிகர் நல சங்க கூட்டம் கவுரவ தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் சண்முகநாதன், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வருகிற மே மாதம் 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் சங்க மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநில சங்கத்தின் மூலம் அடையாள அட்டை பெற்று தருவது, மாநாட்டை தொடர்ந்து ஊட்டிக்கு இன்ப சுற்றுலா சென்று வருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயலாளர் குமார் வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.