அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் மனு

அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் மனு

Update: 2023-07-12 13:17 GMT

அவினாசி

அவினாசி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அவினாசி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வழங்கி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி மற்றும் அவினாசி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தின் சார்பில், மனு அளிக்கப்பட்டது. அதேபோல் அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டிடமும் அவினாசி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்துகொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்