முகமது சதக்கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

முகமது சதக்கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-02-04 18:45 GMT

கீழக்கரை.

கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் டேலன்ஷியா 2கே 23 என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, கல்லூரி துணை முதல்வர் ஷேக் தாவுது, தலைமை கல்வி நிர்வாக அலுவலர் விஜயகுமார், பொறியியல் கல்லூரி பேராசிரியர் அகமது ஹுசைன் ஆசிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துறைத்தலைவர் கணேஷ்குமார் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை சுற்று வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் யோகா, சிலம்பாட்டம், கிராமிய நடனம் உள்ளிட்ட மேலும் அறிவியல் வினாடி-வினா போட்டி, பென்சில் ஓவிய போட்டி, தொழில்நுட்ப பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டது.இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் பாலு முத்து பரிசுகளை வழங்கினார்.முடிவில் முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்