மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம்
தேவதானப்பட்டியில் போலீஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் நடந்தது
தேவதானப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் தேனி மாவட்ட போலீஸ் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா தலைமை தாங்கினார். தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வரவேற்றார். முகாமில் தேனி காவல்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், பெரியகுளம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் தேர்வு குறித்த பல்வேறு விளக்கங்களை அளித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.