சர் ஐசக் நியூட்டன் என்ஜினீயரிங் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர் ஐசக் நியூட்டன் என்ஜினீயரிங் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

Update: 2023-03-29 19:15 GMT

நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னையில் இயங்கி வரும் கிரியா என்ஜினீயர்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கான நிகழ்ச்சியில் கிரியா என்ஜினீயர்ஸ் நிர்வாக இயக்குனர் குருசாமி, கல்லூரி முதல்வர் கிப்சன் சாமுவேல், கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், தேசிய மதிப்பீட்டு மற்றும் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் குமாரவடிவேல், எந்திரவியல் துறை தலைவர் மலை செல்வராஜா ஆகியோர் முன் னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிப்சன் சாமுவேல் பேசும்போது, 'இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு 2 டி, 3 டி மாடலிங், ஆட்டோ கார்ட், எலக்ட்ரிக்கல் துணை மின் நிலைய தொழில்நுட்பம், மேம்பட்ட வலை அமைப்பு, கணினி துறை சார்ந்த படிப்புகளான ஜாவா, பைதான், ஆரோக்கல் மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படும். இந்த பயிற்சிகள் மூலம் மாணவர்கள் எளிதான முறையில் வேலைவாய்ப்பு பெற முடியும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்