ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உறுப்பினர்கள் தர்ணா
பச்சூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தர்ணா உறுப்பினர்கள்போராட்டம் நடத்தினர்.
ஜோலார்பேட்டை
பச்சூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தர்ணா உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வி கிருஷ்ணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி ஊராட்சி உறுப்பினர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உறுப்பினர்கள் கூறுகையில், துணைத்தலைவர் செல்வி கிருஷ்ணன் ஊராட்சி மன்ற செயல்பாடுகளில் நேரடியாக வந்து செயல்படுவதில்லை. அவருடைய கணவன் கிருஷ்ணன் செயல்பாடுகளில் தலையிடுகிறார். அவரது கணவர் ஊராட்சி மன்ற செயல்பாடுகளில் தலையிட கூடாது என கூறியும் மீண்டும் தலையிடுகிறார் இதனால் இதுநாள் வரை 8 வார்டு உறுப்பினர்களும் அவர்களுக்கு கொடுத்த ஆதரவினை ரத்து செய்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றனர்.
சுமார் 1 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட பிறகு கலெக்டரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.