அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்குசிறப்பான வரவேற்பு

திருவிடைமருதூருக்கு வருகை தரும் அன்புமணிராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2023-06-05 21:28 GMT

திருவிடைமருதூர்,

திருவிடைமருதூருக்கு வருகை தரும் அன்புமணிராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டு உள்ளது.

பா.ம.க. கூட்டம்

கும்பகோணம் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சோழபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் கல்லூர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெட் ரமேஷ், பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் ராஜா, தமிழரசன், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க ஆலோசகர் ரமேஷ் வரவேற்றார். ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின், பா.ம.க. மாவட்ட செயலாளர் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி விமல் மாவட்ட துணை செயலாளர்கள் சந்துசாமி, மணிகண்டன், அருமைதுரை, சிவபாலன், கலியன் மற்றும் குருமூர்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

வரவேற்பு

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:- வருகிற 8-ந் தேதி(வியாழக்கிழமை) திருவிடைமருதூரில் நடைபெறும் பா.ம.க 2.0 மாபெரும் பொதுக் கூட்டத்திலும், ஜூன் 9-ஆம் தேதி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி. விமல் திருமண நிகழ்ச்சியிலும், அன்புமணிராமதாஸ் எம்.பி. கலந்து கொள்வதை முன்னிட்டு அவருக்கு அணைக்கரையிலிருந்து கும்பகோணம் வரை சிறப்பான வரவேற்பு அளிப்பது, கூட்டத்தில் குடந்தை வடக்கு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் பா.ம.க. நகர செயலாளர் வினோத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்