1½ லட்சம் உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும்
ஒவ்வொரு தொகுதிக்கும் 1½ லட்சம் உறுப்பினர்களை .தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசினார்.
பெத்தநாயக்கன்பாளையம்
கருமந்துறை பகுதியில்அ.தி.மு.க. உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கட்சியின் சேலம் புறநகர் மாவட்டசெயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கி உறுப்பினர் படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும் போது,'சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 1½ லட்சம் உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் சேர்த்திட கிராமம், கிராமமாக முகாம் அமைத்து சேர்க்கை நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதிக்கு 1½ லட்சம் தொண்டர்களை நாம் சேர்த்து, கட்சியின் பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எதிரிகளையும், துரோகிகளையும் அவர்கள் கொடுக்கும் பல்வேறு இன்னல்களையும் சந்தித்து 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கத்தை 2 கோடி தொண்டர்களாக உருவாக்கி வலிமை சேர்க்க வேண்டும். இதன்மூலம் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்' என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.முருகேசன், கருமந்துறை கூட்டுறவு வங்கி தலைவர் மோகன், சேலம் புறநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் வாசுதேவன், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் அருண்குமார், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கருதிருமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் சித்ரா எம்.எல்.ஏ. ஆகியோர் கருமந்துறை பகுதியில் அமைந்துள்ள கைக்கான் வளவு திட்டத்தை ஆய்வு செய்தனர். மேலும் கட்சி உறுப்பினர் சேர்க்கை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.