மேலபுதுக்குடிஅருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம்

மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-04-04 18:45 GMT

தென்திருப்பேரை:

மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அருஞ்சுனை காத்த அய்யனார்

தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன. 10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகம்

இதையொட்டி காலையில் ஹோமம், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பங்குனி உத்திர கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியும் அய்யனாரை வழிபட்டனர்.

தொடர்ந்து இரவில் பக்தி சொற்பொழிவு, நள்ளிரவில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, உற்சவ அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி மேல புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் எம்.ஆத்திக்கண் நாடார், ஒய்.செந்தில் நாடார், ஆர்.அகோபால் நாடார், எம்.உதயகுமார் நாடார், கே.எஸ்.தினேஷ் நாடார், எஸ்.நாராயணராம் நாடார், ஆர்.சுப்பிரமணிய நாடார், டி.கண்ணன் நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்