மேகதாது விவகாரம்: முதல்-அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் இன்று ஆலோசனை

மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2023-07-03 01:38 GMT

சென்னை,

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மேகதாது விவகாரம் குறித்து இன்று (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, "மேகதாது விவகாரம் குறித்து இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். முதல்-அமைச்சருடன் ஆலோசித்துவிட்டு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளேன்" என்று கூறினார்.

மேலும் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என கூறினார்.

மேலும் செய்திகள்