மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
வாணியம்பாடி, ஆலங்காயம் வட்டாரத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ஆலங்காயம் ஒன்றியம் மற்றும் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மெகா கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்து வருவதை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டி.ஆர்.செந்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி, செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.
வாணியம்பாடிைய அடுத்த புத்துக்கோவில் பகுதியில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
அப்போது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் மணிகண்டன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாம்ராஜ், முன்னாள் ஒன்றிய உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.