அம்பை:
அம்பை யூனியன் பிரம்மதேசம் பஞ்சாயத்தில் அம்பை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்களின் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராம்சங்கர் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மாரிகோமதிசங்கர் முன்னிலை வகித்தார். பணியமர்த்து அலுவலர் பழனி வரவேற்றார். யூனியன் ஆணையாளர்கள் முருகன், பொண்ணு லட்சுமி ஆகியோர் தூய்மை பணிகளை மேற்பார்வையிட்டனர்.
மாணவர்கள் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை வளாகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம், பஸ்நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள முள்செடிகள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோகிலா நன்றி கூறினார்.