மேயருடன், வங்காளதேச துணை தூதர் சந்திப்பு
மேயருடன், வங்காளதேச துணை தூதர் சந்தித்தார்
சென்னையில் உள்ள வங்காளதேச தூதரகத்தில், துணை தூதரக அதிகாரியாக இருக்கும் ஷெல்லி சலேஹின் நேற்று மதுரை வந்திருந்தார். அவர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் வங்காளதேசத்தின் வரலாற்று முக்கியத்துவம், கலாசாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியில் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வங்காளதேசத்தில் உள்ள டாக்கா நகருக்கும், மதுரைக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி பேசினார். மேலும் அவர் மதுரையில் சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் வங்காளதேச மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.