1974-ம் ஆண்டு பணியில் சேர்ந்த உள்ளாட்சி நிதி தணிக்கை துறை முன்னாள் அதிகாரிகள் சந்திப்பு

1974-ம் ஆண்டு உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியில் சேர்ந்து அதிகாரிகளாக ஓய்வு பெற்றவர்கள் சென்னையில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

Update: 2024-01-09 21:40 GMT

சென்னை,

1974-ம் ஆண்டு உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியில் சேர்ந்து அதிகாரிகளாக ஓய்வு பெற்றவர்கள் சென்னையில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டலில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினரான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கருத்தையா பாண்டியன், தமிழ்நாடு வணிக வரித்துறை கமிஷனர் ஜெகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னாள் தணிக்கை பயிற்சியாளர் பாஸ்கரன் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். பணி கால நினைவுகளையும், ஓய்வு வாழ்க்கை எப்படி செல்கிறது? என்பதையும் அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் 1974-ம் ஆண்டு பணியில் சேர்ந்தோர் குழுவை சேர்ந்த இளங்கோவன், சுவாமிநாதன், பாலகுமார், சம்பத் மற்றும் ரெங்கசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்