ஊத்தங்கரையில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்

Update: 2023-06-24 19:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் முனியப்பன் கோவில் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், ரஜினி செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். பேரூர் செயலாளர் பாபு சிவக்குமார் வரவேற்றார்.

வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், நகர அவைத்தலைவர் தணிகை குமரன், பொருளாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் செந்தாமரைக்கண்ணன், மாநில பிரசார அணி செயலாளரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோர் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினர்.

இ்தில் மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் தனிகை கருணாநிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், லயோலா ராஜசேகர், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை நன்றி கூறினார்.

தொடர்ந்து மாரம்பட்டி, மிட்டப்பள்ளி ஆகிய இடங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்