சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

Update: 2023-06-19 19:30 GMT

தர்மபுரி:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்ட ஆயத்த மண்டல கூட்டம் தர்மபுரி சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் காவேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவகி வரவேற்றார். மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, மாநில செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளர் புகழேந்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் லில்லி புஷ்பம் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர்.

30 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கவேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் மணி, கோமதி, மாவட்ட செயலாளர்கள் சாந்தி, தங்கராஜ், அமராவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்