அரூரில் விளம்பர பேனர்களை அகற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம்

Update: 2023-06-06 19:30 GMT

அரூர்

அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம், அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயல் அலுவலர், கலைராணி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் சூர்யாதனபால், நியமன குழு உறுப்பினர் முல்லைரவி, துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பேனர்கள் வைப்பது குறித்த தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார், வணிகர் சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்