காரிமங்கலம்:
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, ராஜகுமாரி, மாவட்ட பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் கோபால், அன்பழகன், நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்சி செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன், மெடிக்கல் சத்தியமூர்த்தி, கீரை விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முனியப்பன், செங்கண்ணன், ரத்தினவேல் சிவப்பிரகாசம், சந்திரமோகன், வேடம்மாள் சவுந்தரராஜன், சரவணன், நகர செயலாளர்கள் முரளி, வெங்கடேசன், மோகன், கவுதமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.