மத்திகிரி:
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாரதி வரவேற்றார். மாநில செய்தி மற்றும் ஊடகப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ராபர்ட் பெல்லார்மென் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். மாநில பொதுசெயலாளர் மெல்கிசேதக் தீர்மானங்கள் வாசித்தார். மாநிலத்தலைவர் அருள் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மூன்று அல்லது நான்கு கிராமங்களுக்கு ஒரு வேளாண்மை விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. துணை வேளாண்மை அலுவலர்களுக்கான சம ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயனாளிகளின் விவரங்களை மாவட்ட இணை இயக்குனர் அலுவலகத்திலேயே மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், மாவட்ட பொருளாளர் மாதேஷ், செல்லைய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைதலைவர் நந்தகுமார் நன்றி கூறினார்.