மண்டல அளவிலானஅஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்புகார்களை ஜூன் 20-ந் தேதிக்குள் அனுப்பலாம்
தர்மபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற உள்ளது. அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தங்களது புகார்களை மண்டல அளவிலான பென்சன் அதாலத் என்று தபால் உறையின் மீது எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தர்மபுரி கோட்டம், தர்மபுரி-636701 என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கோட்ட அளவில் தீர்க்க முடியாத ஓய்வூதியம் தொடர்பான குறைகளை மட்டும் முழு விவரங்களுடன் கோட்டத்தில் அளித்த பதிலுடன் எழுத வேண்டும். சட்ட ரீதியான பிரச்சினைகள் மற்றும் அரசின் கொள்கைகள் சார்ந்த குறைகளை தவிர்க்கவும் ஓய்வூதியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.