தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கம்பைநல்லூர் அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மொரப்பூர்
மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திப்பம்பட்டி கூட்ரோட்டில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். பன்னிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிசெல்வன் துரை வரவேற்று பேசினார். கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாசிலாமணி, மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன், ஒன்றிய கவுன்சிலர் பழனியம்மாள், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராசி தமிழ் நன்றி கூறினார்.