குடிநீர் இணைப்பு பணி குறித்து ஆலோசனை
குடிநீர் இணைப்பு பணி குறித்து ஆலோசனை
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 27-வது வார்டு பகுதியில் மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் அப்பகுதி மக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி பிரியா பள்ளி வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விடுபட்ட பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடந்தது.
இதைத்தொடர்ந்து 52-வது வார்டுக்கு உட்பட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் முக்கிய சாலை மைய தடுப்பு பகுதிகளில் அனுமதியில்லாத மற்றும் பாதுகாப்பில்லாத கேபிள் இணைப்புகளை சீரமைக்கும் பணியை மேயர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.