ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின், மாவட்ட செயற்குழு நிர்வாக கூட்டம், மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன் தலைமையில் நடைபெற்றது. ஓசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.ராமச்சந்திரன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம், மகளிர் அணியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருகிற 14-ந் தேதி, அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஓசூரில் "ஜனநாயகம் காப்போம்- சிறுத்தைகளின் அணிவகுப்பு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சியை ஓசூர் ராகவேந்திரர் கோவில் அருகில் இருந்து தொடங்கி, நேதாஜி சாலை வழியாக சென்று ராம் நகர் அண்ணா சிலை அருகே உறுதிமொழி ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நகர தொண்டரணி அமைப்பாளர் கே.ஆர்.சூரியவளவன் நன்றி கூறினார்.