மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

Update: 2023-03-31 18:45 GMT

எலச்சிபாளையம்:

நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு கூட்டம் மொஞ்சனூர் ஆலங்காடு தோட்டத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மல்லசமுத்திரம் ஒன்றிய விவசாய அணி ஒன்றிய தலைவர் துரைசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நெல், கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது போல் மரவள்ளிக்கிழங்கு, மஞ்சளுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சாயக்கழிவு நீரால் மாசடைந்துள்ள காவிரி ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விவசாய அணி மாநில செயலாளர் பார்த்தசாரதி, விவசாய அணி பார்வையாளர் அருணாச்சலம், மாநில திட்ட செயலாளர் சத்யராஜ், மாவட்ட பொருளாளர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்