குமாரபாளையம் நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

Update: 2023-03-29 18:45 GMT

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர அவைத்தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், நகர செயலாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, பொருளாளர் ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம் சட்டசபை தொகுதி பொறுப்பாளரும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை அமைப்பாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்படுவது? என ஆலோசனைகளை வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர்கள், நகர இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர துணை செயலாளர் ரவி வரவேற்றார். முடிவில் கவுன்சிலர் கதிரவன் சேகர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்