விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-17 18:45 GMT

ராமநாதபுரத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பயிர் காப்பீடு நிவாரணம், வரத்து கால்வாய் சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்த மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ராமநாதபுரம் விற்பனை குழு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 2 விவசாயிகளுக்கு பொருளீட்டுக்கடன் ரூ.2.56 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி, நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, கூட்டுறவு இணை இயக்குனர் முத்துக்குமார், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்