அனைத்து அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் உலக பெண்கள் தின விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரி சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட மகளிர்துணைக்
குழு அமைப்பாளர் இளவேனில் தலைமை தாங்கினார். மாநிலதுணைத்
தலைவர் பழனியம்மாள், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட
அமைப்பாளர்கலாவதி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேவகி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலசெயலாளர் லில்லிபுஸ்பம், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின்பொறுப்பாளர் ஹாஜிகா பேகம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.மாவட்ட தலைநகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகளை தேவையான அளவில் ஏற்படுத்த வேண்டும்.அரசு பெண் அலுவலர்களுக்கு தாலுகா அளவில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும். பெண் ஊழியர்களின் நலனை பாதுகாக்க இதுவரை விசாகா கமிட்டி அமைக்கப்படாத அரசு அலுவலகங்களில் உடனடியாக விசாகா கமிட்டியை அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
---