பென்னாகரம்:
ஏ.ஐ.டி.யு.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்க 7-ம் ஆண்டு பேரவை கூட்டம் ஒகேனக்கல்லில் நடந்தது. மசாஜ் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மாதேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில சிறப்பு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நஞ்சப்பன் சங்க கொடி ஏற்றி வைத்து பேசினார். மூத்த வக்கீல் மோகன் சங்க பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட செயலாளர் கலைசெல்வம், மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் வக்கீல் மாதையன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் மணி, நாமக்கல் மாவட்ட தொழிற்சங்க தலைவர் வக்கீல் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் வக்கீல் பவானி சிவராமன், மாவட்ட துணை செயலாளர்கள் நடராஜன், மணி, மாவட்ட துணைத்தலைவர் சுதர்சனம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் மசாஜ் தொழிலாளர்களை சுகாதார தொழிலாளர்களாக மாநில அரசு அங்கீகரிக்க வேண்டும். மசாஜ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை உதவித்தொகையுடன் கூடிய இலவச கல்வி வழங்க வேண்டும். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை புதுப்பித்து வழங்க வேண்டும். மசாஜ் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும். கொரோனா கால நிவாரண நிதியாக அனைவருக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் விஜய பாரதி, துணை செயலாளர் தர்மராஜா, ஒன்றிய பொருளாளர் முத்து, ஒன்றிய துணை செயலாளர் சதீஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.