மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி காலை 11 மணி அளவில் மேற்பார்வை பொறியாளர் ராஜேசுவரி தலைமையில் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை செயற்பொறியாளர் இளங்கோ தெரிவித்தார்.