மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரியில், தி.மு.க. சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்றார்.

Update: 2023-01-27 18:45 GMT

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நவாப் வரவேற்றார். நகராட்சி தலைவர் பரிதாநவாப், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், சுப்பிரமணி, ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, மகேந்திரன், அறிஞர், பேரூர் செயலாளர்கள் பாபு, தம்பிதுரை, வெங்கட்டப்பன், பேரூராட்சி தலைவர்கள் சந்தோஷ்குமார், அம்சவேணி செந்தில்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், பாலாஜி, பாலு, தமிழ்செல்வன், பிரபு, சவுந்தரபாண்டியன், குப்புராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., திருச்சி சிவா எம்பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, தனபால் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.இந்த கூட்டத்தில், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் செங்குட்டுவன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுகவனம், தீர்மானக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் வேலுமணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்