தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பார்வையாளராக நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில், கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்று கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்துராஜ், செயலாளர் பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி எர்ரப்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவுரம்மாள்அரிச்சந்திரன் தலைமை தாங்கினார். அதிகாரிகள் முன்னிலையில், பொதுமக்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் சித்தேஸ்வரன், கிராம வளர்ச்சி குழு தலைவர் பொன்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி
பென்னாகரம் ஒன்றியம் ஆச்சாரஅள்ளி ஊராட்சி பெருமாள்கவுண்டர் நகரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ரவி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுமதி கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு செலவு திட்ட அறிக்கையை ஊராட்சி செயலாளர் சரவணன் வாசித்தார். சாலை ஆய்வாளர் பழனி, உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார், கிராம சுகாதார செவிலியர் சுபத்ரா, வார்டு உறுப்பினர்கள் பெரியசாமி, மல்லிகா, மாரியப்பன், கந்தன், தீத்தியம்மாள், காளியம்மாள், செல்வம், பார்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பனைக்குளம் ஊராட்சி குட்டமரதஅள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்ரம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மாதேஸ் திட்ட அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை வாசித்தார். உதவி பொறியாளர் இளவேனில், வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணி, உதவி வேளாண் அலுவலர் முனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் கல்பனா, கிராம சுகாதார செவிலியர் அம்சலட்சுமி, வறுமை ஒழிப்பு திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வி ஆகியோர் பேசினர்.
கிட்டனஅள்ளி ஊராட்சி
கிட்டனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுமதி திட்ட அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் உமாராணி விஜயன், சுகாதார ஆய்வாளர் பிரசாந்த், வேளாண் உதவி அலுவலர் முனியப்பன், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமியணஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் பழனியம்மாள், உதவி வேளாண்மை அலுவலர் அருண்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரிமளா கருணா, ஒன்றிய குழு உறுப்பினர் கண்மணி லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் குமார் வரவேற்றார்.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கங்கா காளியப்பன், மல்லிகா ஜோதி, சதீஷ், ராணி ஆதிமூலம், சுமதி சேகர், அசோக், சீனிவாசன், குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாசுவாபுரம் ஊராட்சி
பாசுவாபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் நித்தியா மணி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பட்டாபி துரை வரவேற்றார். கடத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா மோகனசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிசாமி, கலைமணி, செல்லியம்மாள், ராமநாதன், குறளரசி, ஸ்ரீ ராமன், வனிதா, பத்மா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் தீத்தான் நன்றி கூறினார்.