சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டம்

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-08 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 64 ஆயிரத்து 648-க்கான 19 தீர்மானங்களை அலுவலக மேலாளர் ஜெயஸ்ரீ வாசித்து உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன் வைத்தார். இதை அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி அன்புச்செழியன், ரம்யா செல்வகுமார், உமா சோனமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார், வேளாண் வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்