படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம்
படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் வரும் 27-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் கோரிக்கை மனுக்களுடன் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.