தேவகோட்டை நகர் மன்ற கூட்டம்

தேவகோட்டை நகர் மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-12 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை நகர் மன்ற சாதாரண கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:- உறுப்பினர் பெரி.பாலா (தி.மு.க.):- தேவகோட்டையில் உள்ள 14 ஊருணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களை கொண்டு சுத்தப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வடிவேல்முருகன் (அ.தி.மு.க):- மார்க்கெட் குப்பையை அப்புறப்படுத்த வேண்டும். மழைக்காலம் தொடங்கி விட்டதால் கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

அனிதாசஞ்சய் (காங்):- நகராட்சி டெண்டர் விட்டதில் வெளிப்படை தன்மை இல்லை. நகராட்சி வேலைகளை தாமதப்படுத்துபவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கூடாது என்பதை மீறி மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. அகிலா குமாரி பழனிகுமார் (அ.தி.மு.க):- ஞாயிற்றுக்கிழமைகளில் டிரைவர் இல்லை என்ற காரணத்திற்காக குப்பை எடுக்க மறுக்கின்றனர். சிவகாமி ராமநாதன் (தி.மு.க.):- சிவன் கோவில் அருகில் பக்தர்களுக்கு இடையூறாக கோழி சந்தை நடத்துகின்றனர்.முத்தழகு (அ.தி.மு.க.):- நகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதல் உத்தரவுகள் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. லோகேஸ்வரிபழனிவேல் (காங்):- எனது வார்டில் 2 குளக்கால்களை தூர் வார வேண்டும். அந்த குளக்கால் மூலம் சாக்கடை கலந்து தாழையூர் அகதிகள் முகாமில் விஷக்காய்ச்சல் பரவியுள்ளது. அருணகிரி பட்டினத்திலும் காய்ச்சல் பரவுகிறது. தலைவர் சுந்தர லிங்கம்:- நகராட்சி நிர்வாகம் சார்பில் மருத்துவ முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. தற்போதும் உடனடியாக முகாம் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன. 

Tags:    

மேலும் செய்திகள்