ராயக்கோட்டை:
கெலமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் சுகாதாரத்துறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவர் டி.கேசவமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் சுகாதாரத்தை மேம்படுத்த பணி செய்ய வேண்டும் என்றார். இதில் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணதேஜஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.