முன்னாள் நீதிபதியுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
முன்னாள் நீதிபதியை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கோவில்கள் எந்த ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குழு தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கத்தை காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து, குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்வது குறித்து ஆலோசனை செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உடன் இருந்தார்.