சுதந்திர தினத்தன்று 322 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
சுதந்திர தினத்தன்று 322 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.