காரைக்குடி,
திருப்பத்தூரில் தெற்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் தங்க பாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் வக்கீல் முருகேசன், மார்த்தாண்டம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்ட தலைவர் சேதுசிவராமன், முன்னாள் மாணவர் வர்த்தக அணி துணை அமைப்பாளர் சகாதேவன், மாவட்ட பட்டியல் அணி பொது செயலாளர் புதுப்பட்டி ரவிச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய பொது ெசயலாளர் முத்துகுமார் வரவேற்றார். முடிவில் மாதவன் நன்றி கூறினார்.