மோகனூர்:
மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவற்றின் கீழ் பணிகளை மேற்கொள்வது, பதிவேடுகளை பராமரித்தல் குறித்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும், காலரா நோய் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும், குளோரின் கலந்த குடிநீர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.