விஸ்வகர்ம சபை சிறப்பு கூட்டம்

விஸ்வகர்ம சபை சிறப்பு கூட்டம் நடந்தது.

Update: 2022-07-03 17:33 GMT

பரமக்குடி, 

பரமக்குடி விஸ்வகர்மா சபை சிறப்பு கூட்டம் பருத்தியூர் ராமலிங்க சுவாமி மடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ராமநாத புரம் மாவட்ட தலைவர் கோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பரமக்குடி கிழக்கு பகுதி தலைவர் தர்மராஜ், மேற்கு பகுதி தலைவர் மணி, நகர் பொற்கொல்லர் சங்க தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் மண்டல கைவினைஞர்கள் சங்க தலைவர் மலைக்கண்ணு கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியாக வெளியிடப்பட்ட அறநிலையத் துறையில் கோவில் நிர்மால்யம், சிற்பம், கட்டிடம், வாகனம், சிறப்பு தொழில்நுட்பம் பெற்ற விஸ்வகர்மா மக்களை அறங் காவலர் குழுவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். நகை மதிப்பீட்டாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்