நல்லம்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

நல்லம்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.

Update: 2022-06-19 16:55 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டாரக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சின்னசாமி, வட்டார செயலாளர் கிருஷ்ணராஜ், துணை செயலாளர் பாரதி, பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. நஞ்சப்பன் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் மற்றும் தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தேவராசன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், லளிகம்- பச்சாகவுண்டர் தெரு சாலையை சீரமைக்க வேண்டும். நல்லம்பள்ளி-பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் வழங்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டையை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதியமான்கோட்டை ரெயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணை செயலாளர் சித்துராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்