நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்-நாளை நடக்கிறது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் நான் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்பதுடன், அவர்களிடம் மனுக்களை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளேன். மேலும் முந்தைய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.