நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க கிராம ஊராட்சிகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையால் சேதமடைந்த தார்சாலைகளை சீரமைக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் முறையாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தனிநபர் வீடுகளுக்கு வழங்கப்பட்டு பழுதான குடிநீர் இணைப்புகளை சீர்செய்ய உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்துதர வேண்டும். உம்மியம்பட்டி அருந்ததியர் காலனி மயானத்திற்கு செல்லும் சேதமான கான்கிரீட் சாலையை சீர்செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் அரசு அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.